ட்ரெண்டிங்

உறுதியளித்த ஆட்சியர்.....மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்!  

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்க மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தையும், மாற்றுத்திறனாளி அலுவலகத்தையும் கண்டித்து 50- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கூறிய மாற்றுத்திறனாளிகள், கடந்த ஒன்றை ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் வசிக்கும் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. மிகவும் பின்தங்கியுள்ள வீடு இல்லாமல் 5 தாலுக்காவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் வீட்டுமனைகளை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

இதனிடையே, திடீரென மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் காவல்துறையினர், மாற்றுத்திறனாளித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது வந்த மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளிடம் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளிகள், அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.