ட்ரெண்டிங்

வுஷு போட்டி- பதக்கங்களை அள்ளிய சேலம் மாணவர்கள்! 

21- வது மாநில அளவிலான ஜூனியர் & சீனியர் வுஷு சாம்பியன்ஷிப் போட்டி திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளனர். 

தாமோதரன்- 3 தங்கம், தரன்- 2 தங்கம், ஆதிரை- 2 தங்கம், நிகில்- 2 தங்கம், 1 வெள்ளி, வடிவேல்- 1 தங்கம், தர்ஷன்- 1 தங்கம், 1 வெள்ளி, கர்முகிலன்- 1 தங்கம், 1 வெள்ளி, நிக்ஷ்தா- 1 தங்கம், 2 வெள்ளி, மோஹித்- 1 தங்கம், 1 வெண்கலம், கோகிலா- 1 தங்கம், 1 வெண்கலம், நவீன் காந்த்- 1 தங்கம், 1 வெள்ளி, ஹாஹினி- 2 வெள்ளி, தமன்- 2 வெள்ளி, 1 வெண்கலம், ரிபாஷ்- 1 வெள்ளி, ஸ்ரீஹரி- 1 வெள்ளி, பிரித்வி- 1 வெள்ளி, சித்தேஸ்வரன்- 1 வெள்ளி, தார்னிதா- 1 வெள்ளி, மௌலி- 3 வெண்கலம், மிருதுலா- 1 வெண்கலம், அப்புல்- 1 வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர். 

பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட வுஷு சங்கம் (Wushu Associations) வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.