ட்ரெண்டிங்

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்! 

தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இத்தனை நாட்கள் அ.தி.மு.க.வைக் காப்பாற்றியது யார்? தற்போது திடீரென மீண்டும் என்ட்ரி என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கட்சியைக் காப்பாற்றுவேன் என சசிகலா கூறுவது, 3 ஆண்டு வேலைக்கு செல்லாமல் திடீரென வேலைக்கு செல்வது போல் உள்ளது. 

அ.தி.மு.க.வில் யாரும் ஜாதி பார்ப்பது இல்லை. ஏதாவது ஒரு குறை கூற வேண்டும் என்பதற்காக சசிகலாவை அ.தி.மு.க.வை விமர்சித்துள்ளார். ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க. கடந்த 2021- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்திருந்தார் எனத் தெரிவித்துள்ளார்.