ட்ரெண்டிங்

சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு! 

2024-  ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி 'யுவ புரஸ்கார்' விருதுகள் 23 மொழிகளில் வந்த படைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் 'விஷ்ணு வந்தார்' என்ற சிறுகதை தொகுப்பிற்காக லோகேஷ் ரகுமானுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023- ஆம் ஆண்டு சால்ட் பதிப்பகம் 'விஷ்ணு வந்தார்' சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'தன்வியின் பிறந்தநாள்' என்ற கதைகளுக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'பாரதி புத்தகாலயம்' வெளியிட்ட புத்தகம் தான் 'தன்வியின் பிறந்தநாள்' என்பது குறிப்பிடத்தக்கது. யூமா வாசுகி என்ற புனைப்பெயரில் கவிதை, கதை எழுதி வருபவரின் இயற்பெயர் மாரிமுத்து. 

கசாக்கின் இதிகாசம் என்ற மொழிபெயர்ப்புக்கு 2017- ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுப் பெற்றவர் யூமா வாசுகி.