ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழகத்தின் டெலிபோன் ஆப்ரேட்டர் பணியிடை நீக்கம்!

 

போலி ஆவணங்களைக் கொடுத்துப் பணியில் சேர்ந்த சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் டெலிபோன்
 ஆப்ரேட்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் டெலிபோன் ஆப்ரேட்டராகப் பணியாற்றி வந்தவர் சக்திவேல். இவர் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதில் சக்திவேல் மீதான குற்றச்சாட்டு உறுதிச் செய்யப்பட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்து, பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த நான்கு பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.