ட்ரெண்டிங்

பலாப்பழம் விலை சரிந்தது! 

பலாப்பழம் விலை சரிந்ததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் உள்ள காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகளில் பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்ததாலும், தொடர் மழை காரணமாகவும் பலாப்பழம் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சேலத்தில் கனமழை பெய்து வருவதால், பலாப்பழம் அழுகி வீணாகி வருவதாக பழக்கடைகளின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.  

விலை சரிந்த போதும், ரூபாய் 10- க்கு கூட பலாப்பழத்தை வாங்க பொதுமக்கள் முன்வரவில்லை என்று கவலையுடன் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.