ட்ரெண்டிங்

மத்திய அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! 

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஆட்சியிலும் மத்திய அரசு நிதிக் கொடுக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதும் நிதியை குறைத்துத்தான் வழங்கினார்கள். தி.மு.க. மத்தியில் அதிகாரத்தில் இருந்த போதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. 

குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14,000 ஏரிகளில் 6,000 ஏரிகள் தூர்வாரப்பட்டன.  தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. 

போதைப்பொருள் விவகாரத்தில் இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் அரசு அலட்சியம் காட்டுகிறது என்று தமிழக அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.