ட்ரெண்டிங்

வரத்து குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு! 

சேலத்தில் வரத்து குறைவால் பூண்டு விலை அதிகரித்துள்ளது. 

கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் கடுமையான வெயில் தாக்கம் இருப்பதால் பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து சேலம் சந்தைகளுக்கு வர வேண்டிய பூண்டின் அளவு குறைந்துள்ளது. 

இதனால் ரூபாய் 200 முதல் ரூபாய் 300 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பூண்டு தற்போது ரூபாய் 350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் பூண்டின் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.