ட்ரெண்டிங்

மீண்டும் ரூபாய் 55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை! 

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூபாய் 55,000- ஐ நெருங்குகிறது. 

இன்று (மே 18) காலை 09.30 மணி நிலவரப்படி, சேலத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 640 உயர்ந்து, ரூபாய் 54,720- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 4 அதிகரித்து, ரூபாய் 96.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல்- ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.