ட்ரெண்டிங்

மாங்காய்களை நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகள்! 


சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைந்த நிலையில், விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். 

ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20- க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல வகையான மாமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிகளவில் மா மரங்களில் பூக்கள் பூத்திருந்தாலும் காய் பிடிக்கும் நேரத்தில் மழை, வெயில் என்று சீதோஷண நிலை மாற்றத்தால் பூக்களும், பிஞ்சுகளும் கொட்டிவிட்டனர்.

பாதி மாமரங்கள் நோய் தாக்கத்தால் காய்க்கவில்லை. இதனால் நடப்பாண்டில் மாங்காய் விளைச்சல் 60% குறைந்துள்ளது. இந்த நிலையில், தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்த, பெரும்பாலான விவசாயிகள் பழுக்கும் நிலையில் உள்ள மாங்காய்களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். 

பெங்களூரூரா மாங்காய்களில் நுகர்வோர்கள் முன்னிலையில் தோட்டத்தில் பறித்து கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றன. அதேபோல், குத்தாத், மல்கோவா, செந்தூரா, நீளம், குண்டு ஆகிய ரக மாம்பழங்களை கிலோ ரூபாய் 60 முதல் ரூபாய் 150 வரை விற்பனை செய்து வருகின்றன.