கோவை ரயில் நிலையத்தின் யார்டு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், மார்ச் 09, 12 ஆகிய தேதிகளில் கீழ்கண்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 09, 12 ஆகிய தேதிகளில் மட்டும் ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது; மாறாக, போத்தனூர் ரயில் நிலையத்தில் மூன்று நிமிடங்கள் ரயில் நின்றுச் செல்லும்.
அதேபோல், மார்ச் 09, 12 ஆகிய தேதிகளில் மட்டும் எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது; மாற்றாக போத்தனூர் ரயில் நிலையத்தில் மூன்று நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


-SXgDfGgJfO.jpg)