ட்ரெண்டிங்

பட்டாசு விற்பனை இல்லை என வியாபாரிகள் வேதனை!

 

கடும் நிபந்தனைகளால் இந்தாண்டு எதிர்பார்த்த அளவில் பட்டாசு விற்பனை இல்லை என வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

 

தமிழகத்தில் அடுத்தடுத்து நேர்ந்த பட்டாசுக் கடை விபத்துக்களால் நடப்பாண்டில், நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தற்காலிக உரிமம் பெற்றவர்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் கடைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டது.

 

 மாறாக, பொதுத்திடல்களில் கடைகள் அமைத்து பட்டாசு விற்பனை செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டது. சேலம் மாநகரைப் பொறுத்த வரை இரண்டு இடங்களில் பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. வழக்கமாக, தற்காலிக உரிமம் பெற 170 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 65 கடைகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு, பொதுத்திடலில் கடைகள் அமைக்கப்பட்டது.

 

 புதிதாக ஒரு இடத்தில் கடை வைத்து வியாபாரம் செய்வதால் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டதாக பட்டாசு வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து நாம் வியாபாரிகளிடம் கேட்ட போது, "இந்த வருடம் பட்டாசு எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் இல்லை. இடம் மாற்றப்பட்டதால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளோம்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.