சேலத்தில் நாளை (மே 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் நாளை (மே 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக உள் மாவட்டங்களில் இன்று (மே 07) வெப்ப அலை வீசக்கூடும். மே 08- ஆம் தேதி முதல் மே 11- ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் வரை குறையக்கூடும். வரும் மே 09- ஆம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


