ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது?- விரிவான தகவல்!

சேலம் மாவட்டத்தில் கந்தம்பட்டி, கருமந்துறை, நங்கவள்ளி ஆகிய மூன்று துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை (ஆகஸ்ட் 10) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கந்தம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பாலநகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளையார் கோயில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மஜ்ராகொல்லப்பட்டி, தளவாய்ப்பட்டி,  சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்திநகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம், அய்யம் பெருமாம்பட்டி, மாங்குப்பை உள்ளிட்டப் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 10) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.