ட்ரெண்டிங்

அரசு கலை கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

தமிழ்நாடு அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று (மே 06) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024- 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tngasa.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 48, பதிவுக் கட்டணம் ரூபாய் 2 என மொத்தம் ரூபாய் 50 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை; பதிவுக் கட்டணம் ரூபாய் 2 செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே, சேலம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்புக்கான ஆன்லைன் பதிவு கல்லூரியின் முதல்வர் செண்பகலட்சுமி தலைமையில் இன்று (மே 06) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.