ட்ரெண்டிங்

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. 

நாடு முழுவதும் வரும் மே 05- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 02.00 மணிக்கு நீட் நுழைவுத்தேர்வு நடக்கிறது. நாடு முழுவதும் 557 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். 

 https://neet.ntaonline.in/ என்ற இணையதளத்தில் இருந்து மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.