சினிமா

அஜித்துக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த ஷாலினி! 

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி, அவரது மனைவி ஷாலினி விலையுயர்ந்த பைக்கைப் பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் அஜித்குமார் தனது 53- வது பிறந்தநாளை நேற்று (மே 02) கொண்டாடினார். சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளியிலும் அஜித்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். அவர் நடித்த பழைய படங்களான தீனா, பில்லா ஆகியவை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், திரையரங்குகளை அஜித்குமாரின் ரசிகர்கள் விழாக்கோலமாக்கினர். 

இந்த நிலையில், தனது கணவரின் பிறந்தநாளையொட்டி, நடிகை ஷாலினி அஜித்திற்கு பிடித்த டுகாட்டி பைக்கை பரிசாக வழங்கினார். சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த பைக்கின் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 

அதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.