ட்ரெண்டிங்

கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு!

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.  

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 50 கனஅடிக்கும் கீழ் சரிந்துள்ளது. காவிரி வறண்டு பாலைவனமாக மாறி வரும் சூழலில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 0.12 அடி அளவிற்கு குறைந்து வரும் நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகக் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பைக் கொண்டு கோடையை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி, 65.97 அடியாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.