சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பிரசித்திப் பெற்ற பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் நிறைவு நாள் தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இதில், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சுவாமியை வழிபட்டு சென்றனர்.
அதைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் நடந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.


-SXgDfGgJfO.jpg)