ட்ரெண்டிங்

மின்னணு ஏலத்தில் விலை குறைந்த கொப்பரைகள்! 

சேலம் மாவட்டம், ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மின்னணு ஏலத்தில் கொப்பரை விலை குறைந்தது. 

தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலத்தில் சேலம் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த 48 வகையான பிழித்திறன் கொண்ட 3,974 கிலோ கொண்ட கொப்பரைகள் 3 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. 

கடந்த வாரம் உயர்ந்திருந்த கொப்பரை விலை கிலோவிற்கு 2.50 ரூபாய் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.