ட்ரெண்டிங்

பானையைக் குறி பார்த்து உடைத்து அசத்திய மாநகர காவல் ஆணையாளர்!

 

பானையைக் குறி பார்த்து உடைத்து அசத்தினார் சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி.

 

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் காவல் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உயரதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில், பாரம்பரிய உடை அணிந்து மாட்டு வண்டியில் வந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, பொங்கல் வைத்து, விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

அதைத் தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அப்போது, சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமார், தனது கண்ணைக் கட்டிக் கொண்டு, பானையை உடைத்ததை, அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அதைத் தொடர்ந்து, சக காவல்துறை உயரதிகாரிகளும் பானையை உடைத்தனர்.

 

பிரேத்யேகமாக ராட்டினம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், காவலர்களின் குழந்தைகள் ராட்டினத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.