ட்ரெண்டிங்

பறை இசைத்து வாக்குச்சேகரித்த பா.ம.க. எம்.எல்.ஏ.! 

சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக பா.ம.க. எம்.எல்.ஏ. நூதன முறையில் வாக்குச்சேகரித்தார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சேலம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியின் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து, சேலம் தென் அழகாபுரத்தில் பா.ம.க.வின் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான அருள், வீடு, வீடாக சென்று பறை இசைத்து மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவுத் திரட்டினார்.