ட்ரெண்டிங்

விறுவிறுப்பாக நடைபெற்ற எருது விடும் விழா!

 

கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டியில் எருது விடும் விழா நடைபெற்றது. இதற்காக, திருப்பத்தூர், வாணியம்பாடி, பர்கூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம் மற்றும் ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் 350- க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன.

 

விழா தொடங்கியதும், காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. துள்ளிக் குதித்து ஓடிய காளைகளைப் பிடிக்க மாடுப்பிடி வீரர்கள் துரத்திச் சென்றனர்.  

 

இதேபோல், சேலம் மாவட்டத்தில் கருக்கல்வாடியில் கருமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, எருதாட்டம் விழா நடைபெற்றது. இதில் 100- க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் காளையர்கள் கலந்து கொண்டனர். காளைகளைத் திடலில் ஓடவிட்டு எருதாட்டம் நடத்தியதில் காளைகள் அங்கும், இங்கும் துள்ளியோடி இளைஞர்களை முட்டி தள்ளியது.

 

காளைகள் மோதியதில் 10- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.