வருகின்ற ஆகஸ்ட் 25- ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2023 ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 25- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அறை எண் 215- ல் நடைபெறவுள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


