ட்ரெண்டிங்

36 ஆண்டுகளுக்குப் பின் 5 கனஅடியாக சரிந்த நீர்வரத்து!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 36 ஆண்டுகளுக்கு பின் 5 கனஅடியாக சரிந்துள்ளது. 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 16 கனஅடியில் இருந்து 5 கனஅடியாகக் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59 அடியாக சரிந்துள்ளது. 

கடந்த 1988- ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5 கனஅடியாகக் குறைந்திருக்கிறது. அதேபோல், கடும் வறட்சியால் கடந்த 1988- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து முற்றிலுமாக நின்றுப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.