ட்ரெண்டிங்

முதலமைச்சருடன் பேசிய என்ன?- கமல்ஹாசன் ட்வீட்!

சேலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (மார்ச் 30) காலை 11.00 மணிக்கு நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஈரோடு பிரச்சாரத்தின் போது இனிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உரையாடினேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆற்ற வேண்டிய காரியங்களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டோம். ஜூன் 4-ஆம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும், புதிய உயரங்களுக்காகவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (மார்ச் 30) இரவு 07.00 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கும், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மலையரசனுக்கும் ஆதரவுத் திரட்டுகிறார்.