ட்ரெண்டிங்

டி.எம்.செல்வகணபதி வேட்பு மனுத்தாக்கல்! 

சேலம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதி தனது வேட்பு மனுவை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவியிடம் வழங்கினார். 

இந்த நிகழ்வின் போது, தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் தலைவர், காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர். 

சேலம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் விக்னேஷ், பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மனோஜ்குமார் ஆகியோர் போட்டியிடுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. 

யார் இந்த டி.எம்.செல்வகணபதி! 

கடந்த 1991- ஆம் ஆண்டு முதல் 1996- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக டி.எம்.செல்வகணபதி பதவி வகித்துள்ளார். கடந்த 1999- ஆம் ஆண்டு முதல் 2004- ஆம் ஆண்டு வரை சேலம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகப் பணியாற்றினார். 

கடந்த 2008- ஆம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்த டி.எம்.செல்வகணபதி, 2010- ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வுச் செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் சிக்கிய டி.எம்.செல்வகணபதி, 2014- ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் பதவியை இழந்த முதல் தமிழக அரசியல்வாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.