ட்ரெண்டிங்

சேலம் வழியாக நிஜாமுதீனுக்கு சிறப்பு ரயில்! 

 

மங்களூருவில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 22- ஆம் தேதி மங்களூரூவில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு ரயில், கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணுகுண்டா, குண்டூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.