ட்ரெண்டிங்

அரசு அலுவலர்கள் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றிட வேண்டும்- எஸ்.ஆர்.ப

சேலம் மாவட்ட ஆட்சியாகத்தில் நேற்று (அக்.06) மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம், குழுத்தலைவர் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் இ.ஆ.ப. முன்னிலையில் நடைபெற்றது.

 

கூட்டத்தில் பேசிய சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்,மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் நோக்கம் அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது, அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, நிதிகள் முறையாக சென்று சேர்வதையும், அதன் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டம் 37 துறைகள் சார்ந்த பணிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அதுதொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

 

சேலம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர், கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத வகையில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கென கூடுதலான நிதியை வழங்கியிருக்கிறார். குறிப்பாக, தமிழக முதலமைச்சர் ஆட்சிபொறுப்பேற்றது முதல் சேலம் மாவட்டத்திற்கு 8 முறை வருகை தந்து ரூபாய் 5,600 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

 

மேலும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், சேலம் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக, அலுவலர்களுடன் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களின் தேவைகளுக்கேற்ப புதிய திட்டங்களை மாவட்டத்தில் கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறார்கள். நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்திடவும், அதற்கான கூடுதல் நிதியை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் சென்று பெற்றுத்தரவும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசால் செயல்படுத்தப்படுகின்ற அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உரிய காலத்தில் கொண்டு வருவதை உறுதிச் செய்யும் வகையில் இத்தகைய மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

 

அந்த வகையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரக குடிநீர் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் ககாதாரம், வேளாண்மை, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து விரிவாக இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

 

அரசு அலுவலர்கள் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, மின்சார வசதி, மருத்துவம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது". இவ்வாறு எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.