சேலம் வழியாக பெங்களூரு- கண்ணூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 19, 26 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கும், மறுமார்க்கத்தில் மார்ச் 20, 27 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


