ட்ரெண்டிங்

தமிழகத்தில் ஏப்.19- ஆம் தேதி வாக்குப்பதிவு! 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 102 மக்களவைத் தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது. வரும் மார்ச் 20- ஆம் தேதி தொடங்கும் வேட்பு மனுத்தாக்கல், மார்ச் 27- ஆம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 28- ஆம் தேதி வேட்பு மனு மீதான பரிசீலனையும், வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 30- ஆம் தேதி கடைசி நாளாகும். 

நாடு முழுவதும் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணி வரும் ஜூன் 04- ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.