ட்ரெண்டிங்

கால்நடை வளர்போர் கவனத்திற்கு! 

கால்நடை வளர்போர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர்.என்.பாரதி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் நிலவும் பருவநிலை மாற்றம் காரணமாக, பரவலாக வெப்பத்தாக்கம் மற்றும் மழையினால் கால்நடைகளுக்கு நோய் தொற்று மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அதன் விவரத்தினை உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவர் அல்லது கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொண்டு கால்நடைகளின் பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்து நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை பெறவும் மற்றும் நோய் கிளர்ச்சி ஏற்பட்டுள்ள
பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி இழப்பிலிருந்து தற்காத்து கொள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், அவசரகால தொடர்புக்கு சேலம் மண்டல இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண். 0427-2451721 மற்றும் நடமாடும் கால்நடை மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி எண்1962- க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.