ட்ரெண்டிங்

தார் சாலை அமைக்கும் பணிக்கு மேயர் ராமச்சந்திரன் பூமி பூஜை! 

சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டலத்திற்கு 23-வார்டில் உள்ள சொட்டையன் தெருவில் ரூபாய் 9 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் கான்கீரிட் சாலை அமைப்பதற்கான பணிகளையும், அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 12- வது வார்டில் உள்ள அய்யர் தோட்டம் பகுதியில் ரூபாய் 9 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் கான்கீரிட் சாலை அமைப்பதற்கான பணிகளையும் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் இன்று (மார்ச் 15) தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் சாரதாதேவி, கண்காணிப்பு பொறியாளர் கமலநாதன் மண்டலக்குழுத்தலைவர் உமாராணி, நிதிக்குழுத்தலைவர் குமரவேல், செயற்பொறியாளர் திலகா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.