ட்ரெண்டிங்

அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் எம்.பி. பங்கேற்பு! 

சேலம் அரசு கலைக் கல்லூரியில் இன்று (மார்ச் 15) கல்லூரியின் முதல்வர் செண்பகலட்சுமி தலைமையில் கல்லூரி ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. சேலம் மேற்கு ,மாவட்டச் செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டார். 

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். அத்துடன், தமிழ்நாடு அரசு சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும், மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். 

விழாவில், மாணவர்கள், கல்லூரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.