ட்ரெண்டிங்

கராத்தே சங்கத்தின் ஆலோசனை கூட்டம்!

 

சேலம் மாவட்ட கராத்தே சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கராத்தே சங்கத்தின் தலைவர் சென்சாய்.ராஜா தலைமையில் பேர்லண்ட்ஸில் நடைபெற்றது .  

 

கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் சென்சாய்.சரவணன், கராத்தேவால் மாணவர்களின் வளர்ச்சி, சங்கத்தின் முன்னேற்றம் மற்றும் உறுப்பினர்களின் நலத்திட்டம் பற்றியும் விளக்கினார். தொழில்நுட்ப இயக்குனர் சென்சாய். மாதேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். 

 

துணைத்தலைவர்கள் சென்சாய். அன்பழகன், செல்வம், இணைச்செயலாளர்கள் சென்சாய். ஸ்டாலின், சக்திவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஹரிஹரன், கனகசிவம் , அருண்குமார், ரகுநாதன் மற்றும் தேசிய போட்டியாளர்கள் யஸ்வந்த், கிஷோர், ஸ்ரீதர் ஆகிய அனைவருக்கும் சேலம் மாவட்ட கராத்தே சங்கத்தின் உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது.