ட்ரெண்டிங்

ரயில் பயணிகளின் கவனத்திற்கு! 

திருப்பத்தூர்- பங்காரப்பேட்டை ரயில் நிலைய வழித்தடத்தில் பொறியியல் ரீதியிலான பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், எர்ணாகுளம்- பெங்களூரு ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பத்தூர்- பங்காரப்பேட்டை ரயில் நிலைய வழித்தடத்தில் பொறியியல் ரீதியிலான பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வரும் மார்ச் 11- ஆம் தேதி அன்று எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், மார்ச் 12- ஆம் தேதி பெங்களூரு- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் முழுமையாக ரத்துச் செய்யப்படுகிறது. 

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு கட்டணம் முழுவதுமாகத் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.