ட்ரெண்டிங்

ரூபாய் 1.12 கோடிக்கு பருத்தி வர்த்தகம்! 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தைக் காட்டிலும் பருத்தி வரத்து அதிகரித்த போதும், விலையில் மாற்றம் இல்லாததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். 

பி.டி.ரகம் குவிண்டாலுக்கு 7,000 ரூபாய் வரையிலும் ஏலம் போகின. மற்ற வகை பருத்தி குவிண்டாலுக்கு ரூபாய் 9,000 முதல் ரூபாய் 11,000 வரையிலும் ஏலம் போகின. வழக்கத்தை விட கூடுதல் விலை கிடைத்ததால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ஆத்தூர் வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.