கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கொல்கத்தாவிற்கு சேலம் வழியாக டேங்கர் லாரி ஒன்று குருடாயில் ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரி, தொப்பூர் ரயில்வே பாலம் அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தில் டேங்கர் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. தகவலறிந்து வந்த தொப்பூர் காவல்துறையினர், டேங்கர் லாரியை கிரேன் உதவியுடன் மீட்டனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக, தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.


