ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்சாட்-3DS செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் இன்று (பிப்.17) மாலை 05.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
அதைத் தொடர்ந்து, ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாகப் பிரித்தனர். பின்னர், திட்டமிட்டபடி புவி சுற்றுவட்டப்பாதையில் இன்சாட்- 3DS செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தினர். ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் வெற்றியைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகளைக் குலுக்கியும், கட்டியணைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், இன்சாட்-3DS வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்றும், விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)