சம வேலைக்கு சம ஊதியம் என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியாக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தது தற்பொழுது 3 ஆண்டுகள் ஆகியும், இந்த தேர்தல் வாக்குறுதி 311- ல் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக, இரண்டாவது நாளாக சேலம் கோட்டை மைதானத்தில் தேர்தல் வாக்குறுதி 311- ல் அறிவித்த சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை ஆசிரியர்கள் எழுப்பி, தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சேலம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200- க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



-SXgDfGgJfO.jpg)