ட்ரெண்டிங்

சேலத்தில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 33 ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, சென்னை, திருச்சி, சேலம், சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அந்த வகையில், தி.நகர் காவல் உதவி ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக இருந்த சிவக்குமார், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், சேலம் மாநகர காவல் துறையின் தெற்கு துணை ஆணையராக இருந்த லாவண்யா, சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி எஸ்.பி.யாக இருந்த சந்திரமௌலி, சேலம் மாநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.