மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றினார்.
பட்ஜெட்டில் சேலம் மாவட்டத்திற்கான அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்படும்; மதுரை, சேலம் மாநகராட்சிகளில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விருதுநகர், சேலத்தில் ரூபாய் 2,483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்; இரண்டு ஜவுளி பூங்காக்கள் மூலம் 2.08 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சேலம், தஞ்சாவூர், திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய ஐந்து மாவட்டங்களில் நியோ டைட்டல் பூங்காக்கள் அமைக்கப்படும்; இதன்மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


