ட்ரெண்டிங்

சேலம்-மதிய உணவு சாப்பிட்டேன் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் !

 

சேலத்தில் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் தனியார் நடத்திய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வந்த பள்ளி மாணவர்கள் வாந்தி மயக்கம்..

விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்த உணவு கெட்டுப் போனதால் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்..

சேலம் மரவனேரி கோர்ட் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் தனியார் விளையாட்டு நிறுவனம் நடத்திய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சேலம் தர்மபுரி நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிலையில் மதியம் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கிய உணவு கெட்டுப் போனதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 10 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..

இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்