ட்ரெண்டிங்

பல்வேறு திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. அருள்!

 

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், பா.ம.க.வின் மாவட்டச் செயலாளருமான அருள், தனது தொகுதிக்குட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்ததுடன், வளர்ச்சித் திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். 

 

அந்த வகையில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சேலம் 22வது வார்டுக்கு உட்பட்ட பட்டகாரன் தெருவில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கும், வேட்டைகாரன் புதூரில் பழுதடைந்து இருந்த உயர்மட்ட 30,000 லீட்டர் தண்ணீர் தொட்டியை இடித்துவிட்டு ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய தொட்டி கட்டுவதற்கான பணிக்கும், குள்ளம்பூசாரியூரில் பல ஆண்டுகளாக இருந்த குடிநீர் பிரச்சினைப் போகும் வகையில் ரூபாய் 7.30 லட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் குடிநீர் தொட்டி அமைக்கும் பணிக்கும், இந்திரா நகரில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிட்டில் தண்ணீர் டேங்க் அமைக்கும் பணிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், பொதுமக்களுடன் இணைந்து பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.