ட்ரெண்டிங்

சமூகநீதி குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை-அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆவேசம்!

 

சேலம் சூரமங்கலம் பகுதியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அவர் தெரிவித்ததாவது, "நாடாளுமன்றத் தேர்தலுக்கு கடந்த 10 மாதங்களாக பா.ம.க. தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் நலன் மற்றும் இந்தியாவின் நலன் கருதி, அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை ராமதாஸ்சிற்கு பொதுக்குழு வழங்கியுள்ளது. தமிழகத்தில் அரிசி விலை 6 ரூபாய் அதிகரித்துள்ளது. கூடுதலாக 12 ரூபாய் உயரவிருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு குறுவை, சம்பா சாகுபடி குறைந்துள்ளது. முறையான தண்ணீர் கிடைக்காததால் குறுவை கருகியது. சம்பாவும் குறைந்த அளவில் சாகுபடி செய்துள்ளது. எனவே அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகவும், பிற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு முடித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறது. இது கண்டிக்கதக்கது. சமூகநீதி குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.