ட்ரெண்டிங்

ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள், போதைப் பொருட்கள் பறிமுதல்!

 

ஓமலூர் அருகே பெங்களூருவில் இருந்து ஓமலூருக்கு கடத்தப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் போதை வஸ்துக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மற்றும் போதை வஸ்துக்கள் கடத்தப்படுகிறது. காரில் போதைப்பொருட்கள் கடத்திச் செல்வது குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் புளியம்பட்டி பகுதியில் காரை மடக்கிப் பிடித்தனர்.

 

இதனிடையே தப்பியோட முயன்ற இரண்டு பேரையும் மடக்கிப் பிடித்து, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் போதைப்பொருட்களை கைப்பற்றியதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

 

காவல்துறை விசாரணையில் தேனி மாவட்டம், அல்லிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், தேனி மாவட்டம், பள்ளிப்பட்டியைச் சேர்ந்த இளையராஜா ஆகியோர் பெங்களூருவில் இருந்து தேனிக்கு தடைச் செய்யப்பட்ட புகையிலைப் போதை வஸ்துக்களைக் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.