ட்ரெண்டிங்

சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!

 

கந்தசஷ்டி பெருவிழா, கார்த்திகைத் தீபத் திருவிழா, சுபமுகூர்த்தங்கள், சபரிமலை சீசன் உள்ளிட்ட காரணங்களால் சேலம் மாநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வ.உ.சி. மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று (நவ.18) கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தைத் தொட்டுள்ளது.

 

அதன்படி, குண்டு மல்லிகை கிலோ 1,200 ரூபாய்க்கும், முல்லை கிலோ 800 ரூபாய்க்கும், ஜாதிமல்லி கிலோ 360 ரூபாய்க்கும், காக்கட்டான் கிலோ 500 ரூபாய்க்கும், கலர் காக்கட்டான் கிலோ 400 ரூபாய்க்கும், மலைக்காக்கட்டான் கிலோ 500 ரூபாய்க்கும், அரளி கிலோ 160 ரூபாய்க்கும், வெள்ளை அரளி கிலோ 160 ரூபாய்க்கும், மஞ்சள் அரளி கிலோ 160 ரூபாய்க்கும், செவ்வரளி கிலோ 200 ரூபாய்க்கும், ஐ.செவ்வரளி கிலோ 180 ரூபாய்க்கும், நந்தியாவட்டம் கிலோ 500 ரூபாய்க்கும், சி.நந்திவட்டம் கிலோ 1,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயரும் என்று தெரிவித்துள்ள வியாபாரிகள், பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.