சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 54- வது வார்டு தாதகாபட்டி சீரங்கன் தெரு 4, 5 ஆகிய தெருக்களில் நடைபெறவுள்ள சாலை பணிகளின் விவரங்களை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் சீ.பாலச்சந்தர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து, 55- வது வார்டில் உள்ள தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் நடைபெற்று வரும் தார்சாலைப் பணிகளை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் சீ.பாலச்சந்தர் ஆகியோர் சாலையின் தரத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்ற ஆதார் மையத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வுச் செய்தனர். இந்த ஆய்வின் போது, மண்டலக் குழுத் தலைவர் அசோகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


-SXgDfGgJfO.jpg)