சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான் கார்மேகம் வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14,56,299 எண்ணிக்கையிலும், பெண்கள் 14,71,524 எண்ணிக்கையிலும், இதரர் 299 எண்ணிக்கையிலும் இடம்பெற்றுள்ளனர். ஆக மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27- ஆம் தேதி முதல் டிசம்பர் 12- ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 69,546 வாக்காளர்க பெயர் சேர்க்கப்பட்டும். 34.033 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டும். 18 முதல் 19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 53,391 எண்ணிக்கையிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களில் விண்ணப்ப படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் voters.eci.gov.in என்ற முகவரிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



