ட்ரெண்டிங்

வித விதமான கோலங்களைப் போட்டு அசத்திய கல்லூரி மாணவிகள்!

 

சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டையில் அமைந்துள்ளது கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் மூன்று நாட்களுக்கு "முப்பெரும் விழாவின்” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று (ஜன.10) கல்லூரி மாணவிகளுக்கான மெஹந்தி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

இரண்டாம் நாளான இன்று (ஜன.11) காலை 11.00 மணிக்கு மாணவிகளுக்கான கோலப் போட்டி நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை மாணவிகளும் பங்கேற்றனர். இப்போட்டியில் பல்வேறு வண்ணங்களை பயன்படுத்தி பொங்கல் பொங்குவது போலவும், மாடு மற்றும் கரும்பு போன்றவற்றை மிகவும் அழகாக கோலம் போட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

 

சிறப்பாக கோலம் போட்ட முதல் மூன்று மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் தங்கவேல், செயலாளர் விஜய் கணேஷ், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரியின் முதல்வர் விமலாதித்தன் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.